பிரபாகரனைப்போல் வடக்கு மாகாண முதலமைச்சர் இரண்டு மகன்களையும் போராட்டத்தில் இணைக்கவேண்டும்

82 0

nimalka_ciதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப்போல், வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் தனது இரண்டு மகன்களையும் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டுமென கோரிக்கையொன்றை முன்வைப்பதாக நிமல்கா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்ணாண்டோ இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விட்டு வேறு வழியில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். அந்தப் பயணம் மிகவும் ஆபத்தானது.

விக்னேஸ்வரனை அரசியலுக்குக் கொண்டுவர தனிப்பட்ட ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் என்ற ரீதியில் தான் தற்போது பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.