இலங்கை பிரதமர் இந்தியாவில்

64 0

ranil-sonia34-05-1475662279இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தி இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தொடர்ந்தும் முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சிணைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் சிரேஸ்ட தலைவர்கள் ஆனந்த் சர்மா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கையில் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு புதிய அரசியல் பரிமானம் ஒன்றை நோக்கி சென்றமையானது வரவேற்கத்தக்க விடயமாக உள்ளதாக மன்மோகன் சிங் இதன்போது தெரிவித்தார்.