சிரியாவுக்கு ஏவுகணை அனுப்பியது ரஷ்யா

277 0

%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-1சிரியாவுக்கு ரஷ்யா அதி நவீன வான் எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் உள்ள ரஷ்யாவின் வான்படைத்தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த எதிர்ப்பு ஏவுகணைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் மேற்கத்தேய நாடுகள் அதிருப்தி கொண்டுள்ள நிலையில், இவை அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே ரஷ்யாவுடனான சிரிய அமைதி பேச்சுவார்த்தைகளில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.