ஹெரோயின் போதைபொருள் வைத்திருந்த குற்றாச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹப்புத்தளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிசார் ஹப்புத்தளை ரயில் நிலையத்தின் ஊழியராக இருந்து வரும் 32 வயதுடைய நபரை பரிசோதனை செய்த போது அவரிடமிருந்து 30 மில்லி கிராம் எடையுடன் கூடிய ஹெரோயின் போதை வஸ்துவை கைப்பற்றியதுடன் அந் நபரையும் கைது செய்தனர்.
குறித்த நபர் விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது ரயில் பயணிகளுக்கும் இந்நபர் பகுதி நேரத்தில் ஆட்டோவொன்றினை செலுத்துவதால் ஆட்டோவில் பயணிக்கும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளுக்கும் நீண்டகாலமாக ஹெரோயின் போதை வஸ்துக்களை விற்பனை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்தும் பொலிசார் இந்நபரை தீவிர புலன் விசாரணைக்குற்படுத்தியுள்ளனர்.
மேலும் இந் நபரிடமிருந்து மீட்கப்பட்ட 30 மில்லிகிராம் ஹெரோயின் போதை வஸ்துக்கள் போதை தரக் கூடிய இனிப்பு வகைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி,சிம் காட்கள் கையடக்கத் தொலைபேசி ஆகியனவற்றையும்,ஹப்புத்தளை பொலிஸ் நிலையப் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


