50 ரூபாய் கொடுப்பனவை தோட்டத்தொழிலாளர்களுக்கு நிச்சயம் பெற்றுக்கொடுப்போம்-மனோ

205 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கத்தினால் உறுதி அளிக்கப்பட்டது. அதற்கமைய 50 ருபாய் மேலதிக கொடுப்பனவை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் மற்றும் இந்துமத கலாச்சார அமைச்சர் மனோகனேசன் தெரிவித்தார்.

அவரது அமைச்சில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 21 சகவாழ்வு சங்கங்களுக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வை தொடர்ந்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில் ,

இருந்த போதிலும் தோட்டத்தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளமைக்கு அமைய சம்பன உயர்வு தொடர்பாக ஆராயப்பட்டு நாளொன்றுக்கு 50 ரூபாவை பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கைகள் அரரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளன. .

தோட்டத்தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுத்தருவோம் என்ற  பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்ற நாம் தயாராகவில்லை. மாறாக மேலதிக கொடுப்பனவாக 50 ருபாவை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் .

இதே வேளை, தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்படவேண்டிய அவசியம் இல்லை . ஏனெனில் தோட்டக்கம்பனிகள் தனியாருடையவையாக காணப்படுவதனால் குறித்த விடயம் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் முன்மொழிய படவேண்டிய அவசியம் இல்லை . 

ஆயினும் தோட்டத்தொழிலாளர்களின் நலனைக்கருத்தில் கொண்டு இவ்வாறாக பிரச்சிகைக்கு ஆராய்ந்து தீர்வு காணும் வகையிலேயே சம்பள உயர்வு பிரச்சினையை ஆராயப்படுதல் தொடர்பிலான முன்மொழிவுகள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.