மஹிந்த திருட்டு வழியால் வந்து ஆட்சையை பெற்றுக்கொண்டார்-அஜித்

278 0

நாட்டின் கடன்சுமையை அடைக்க வழியில்லாமல்  தப்பிச்சென்ற மஹிந்த ராஜபக்ஷ் திருட்டு வழியால் வந்து ஆட்சையை பெற்றுக்கொண்டார். அதன் காரணமாகவே அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டன என ராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான  வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் நான்காவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ராஜபக்ஷ அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக தெரிவித்து மக்களுக்கு பிரயோசனமற்ற வேலைத்திட்டங்களையே  மேற்கொண்டுள்ளன. அதனால் அதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை அடைப்பதற்கு வழிதெரியாமல் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே தேர்தலுக்கு சென்று தப்பிச்சென்றார்.

ஆனால் நாங்கள் ஆட்சியை பெற்றுக்கொண்டு கடன்களை அடைப்பதற்கான வழிகளை அமைத்து, அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு சென்றோம். என்றாலும் மஹிந்த ராஜபக்ஷ் திருட்டு வழியால் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தார். இதனால்  எமது பயணம் தடைப்பட்டது. அதன் விளைவாகவே வரவு செலவு திட்டத்தையும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கவேண்டி ஏற்பட்டது.எனத் தெரிவித்தார்.