லெப்.கேணல்.குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள்

404 0

kumarappa_pulenthiran-720x480இந்திய இராணுவத்துக்கெதிராக விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் முனைப்புப் பெற்றிருந்த நேரம், அதே காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரம், காங்கேசன் துறைக் கடற்பரப்பில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கைதுசெய்யப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான லெப்.கேணல்.குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள் நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்ட நாள் இன்றாகும்.(5)

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி விடுதலைப் புலிகளின் ஆவணங்களுடன் காங்சேன்துறைக் கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தகுமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் ஆகியோர் இலங்கை படையினரின் ஆதரவோடு இந்திய படையினரால் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை இராணுவ முகாமிற்கும் பின்னர் பலாலி இராணுவ முகாமிற்கும் கொண்டுசெல்லட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே, இவர்களை விடுதலை செய்வதற்காக விடுதலைப்புலிகள் இந்தியாவுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்தியா விடுதலைப்புலிகளை ஏமாற்றிவிட்டு அனைவரையும் கொழும்புக்கு அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தது.

இதனால், இவர்கள் அனைவரும் சயனைட் நஞ்சருந்தி தமது மக்களுக்காக தமது உயிரை மாய்த்துக்கொண்டனர்.

இந்தப் பன்னிரு வேங்கைகளின் நினைவாகவும் வல்வெட்டித்துறையிலுள்ள தீருவில் பகுதியில் நினைவுத்தூபி எழுப்பப்பட்டது. அது தற்போது சிறீலங்காப் படையினரால் இடித்தழிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.