அரச பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நவீன கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். ஒரு இலட்சம் என்ற இலக்கில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வருட இறுதிக்குள் 90 ஆயிரம் பேராக அதிகரித்து அடுத்த வருடத்தில் இலக்கை எட்டிப்பிடிப்போம்.
நாம் எமது நாட்டில் குறுகி வாழமுடியாது உலகை எட்டிப்பிடிக்க வேண்டும். அதனை அடைவதற்கு நவீன கல்வி முறைகளைக் கிராமிய மட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.


