நெய் என விலங்குகளின் கொழுப்பை விற்ற நபர் கைது

264 0

வத்தளை பகுதியில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தி நெய் தயாரித்து விற்பனை செய்த  நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த நபரை கைதுசெய்ததாக அதிகாரி தெரிவித்துள்ளார். 

குறித்த  இடத்தில்  விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பாத்திரம், பாம்  எண்ணெய் அடங்கிய பாத்திரம் மற்றும் நெய் அடங்கிய பாத்திரங்களை கைப்பற்றியுள்ளனர். 

பாம் எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்பை கலப்படம் செய்து  நெய்யை தயாரித்து விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் நேற்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டமைக்காக சுமார் 10 ஆயிரம் ரூபா அபராதத் தொகை செலுத்தியுள்ளார். 

குறித்த நெய் போத்தல்களை சேதப்படுத்தி அழிக்கப்படுமென  நீதவான் நீதிமன்றில் நுவோர் அதிகாரி தெரிவித்துள்ளார். 

குறித்த நெய் போத்தல்கள் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மொத்தமாக அல்லது சில்லறையாக கடைகளில் விற்பனை செய்வதாக  தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகவோர்  அதிகாரி தெரிவித்துள்ளார்.