செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இரண்டு வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 04 மணியளவில் கல்கிஸ்ஸ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 மற்றும் 35 வயதுடைய நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காமினி ஒழுங்கை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு சந்தேகநபர்களும் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


