கொடிகாமம் வாகன விபத்தில் ஒருவர்பலி

272 0

கொடிகாமம் கச்சாய் வீதியில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

மோட்டார் சைக்களிலில் பயணித்த குலேந்திரநாதன் பிருந்தன் 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்தார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 32 வயதுடைய  பிரதேச சபை ஊழியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Share