சர்வதேச நீதிபதிகளை பெற்று கொள்ளும் எண்ணமில்லை-லக்ஷமன்

281 0

சர்வதேச நீதிபதிகளை இலங்கை பெற்று கொள்வதற்கு எந்த வித உடன்பாட்டையும் ஏற்படுத்தி கொள்ள வில்லை என்று சபை முதல்வருமான அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். 

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் செஹான் சேமசிங்க ஆகியோர் ஜெனிவா மனித உரிமைகள் பிரேரணை தொடர்பில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

இலங்கை நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் தற்பொழுது நம்பிக்கை உண்டா என்று இதன் போது அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் வினவினார். கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி கொள்ளையடித்ததாக அமைச்சர் கூறினார். நீதிமன்றம் தொடர்பில் குறை கூறப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 

அன்று சர்வதேச பொருளாதார தடையை கூட விதிப்பதற்கு இடம் இருந்ததாகவும் தெரிவித்த அமைச்சர் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் நிலைமை மாற்றமடைந்ததாகவும் கூறினார். 

அரசாங்கம் சர்வதேசத்துடன் நெருக்கமாக செயற்பட்டு வருதாக தெரிவித்த அமைச்சர் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்தார். 

ஜெனிவா பிரேரணையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மாத்திரம் இருப்பதாகவும் முன்னைய பிரேரணையின் திருத்தத்தை மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் எந்தவொரு படை வீரர் அல்லது எவரும் சர்வதேச நீதிபதிகளிடம் செல்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.