வரவு செலவுத்திட்டம் நிச்சியமாக பெரும் தோல்வியினையே சந்திக்கும்!

302 0

இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நிச்சியமாக பெரும் தோல்வியினையே சந்திக்கும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுகொடுப்பதற்கான ஏற்பாடுகளோ அல்லது இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினை மட்டுபடுத்தி உள்நாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான எந்தவித ஏற்பாடுகளும் இவ்வருடத்துக்கான  வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. 

இதேவேளை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்து நேரடியாக பொது தேர்தலுக்கு செல்வதினூடாகவே அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.