துணுக்காய் பிரதேச முன்னாள் போராளிகளை சந்தித்தார் அமைச்சர் டெனிஸ்வரன் (படங்கள் இணைப்பு)

343 0

k800_14449869_10210529502982960_8622292521838101431_n1துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிந்திராத நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டெனிஸ்வரன். குறித்த சந்திப்பு துணுக்காய் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது அதன்போது தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டம் அவர்களுக்கு சென்றடயாமைக்கான காரணங்களை ஆராந்ததோடு அவை அவர்களுக்கு கிடைப்பதற்குரிய நடவடிக்கையினையும் மேற்கொண்டு அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது தமக்கு வேலைவாய்ப்புக்கள் தரப்படும் சந்தர்பத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் தமக்கு நிரந்தரமான தொழில் இருப்பின் தம்மால் வாழ்கையை கொண்டு நாடாத்த முடியுமெனவும் தெரிவித்தனர். அதன்போது அமைச்சர் அப்பிரதேசத்தில் எவ்வாறான தொழிற்சாலையை நிறுவி வேலைவாய்ப்பை வழங்கமுடியுமென ஆரந்ததோடு அதற்கான ஏற்பாடுகளை தாம் செய்துதருவதாக உறுதியளித்தார்.

k800_14463158_10210529476182290_8700301836522689461_n1

மேலும் வாழ்வாதார உதவிகள் பற்றி அறியாமைக்கு கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் இயங்காமையே காரணம் எனவும் அவ்வாறு இயங்காத சங்கங்களை இனங்கண்டு தமக்கு தெரியப்படுத்துமிடத்து அவற்றின் நிருவாகத்தை கலைத்து புதிய நிருவாக தெரிவுக்கு அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக துடிதுடிப்புள்ள இளைஞர்கள் நிருவாகத்தில் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் பொதுநோக்கோடு நேரத்தை ஒதுக்கி கிராமமும் மக்களும் முன்னேற உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

k800_14581505_10210529489142614_6991912507412342940_n1

மேலும் கி.அ.ச மற்றும் மா.கி.அ.ச என்பவற்றிற்கு பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை உபயோகித்தாலே பலருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியுமெனவும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும் போது விசேட தேவையுடயோரை அவர்களே இனங்காட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

k800_14568037_10210529497822831_5481808241162441845_n1

மேலும் தம்மால் ஆன அபிவிருத்திகளை தாம் அப்பிரதேசத்திற்கு செய்துவருவதாகவும் குறிப்பாக துணுக்காய் அக்கராயன் வீதி அபிவிருத்தி செய்வதனையும் சுட்டிக்காட்டினார். மேலும் பல பிரச்சனைகள் ஆராயப்பட்டதுடன் அச்சந்திப்பு இரவு 8 மணி வரை நீடித்ததுடன் மின்சாரம் தடைப்பட்டபோதும் வாகனத்தின் பிரதான ஒளிவிளக்கின் ஒளியில் இச்சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

k800_14591591_10210529504583000_2111249917354520694_n1