கூட்டுறவு தேர்தல் என்பது நாட்டு மக்களின் தேர்தல் அல்ல- அர்ஜூன ரணதுங்க

254 0

arjuna-ranathunga-1

கூட்டுறவு தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் நிலைப்பாட்டினை தீர்மானிக்க இயலாதென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

 

மேலும் கூட்டுறவு தேர்தல்கள் முடிவினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் எதிர்காலம் குறித்து கருத்துரைப்பது தார்மீகத்திற்கு முரணான செயற்பாடெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நுகேகொடை கங்கொடவில மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றில் ஆஜராகியதன் பின்னர், ஊடகங்கவியலாளர்களினால் எழுப்பப்பட்ட வினாக்களிற்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
பெரும்பாலான மக்களின் ஆதரவு ஜனாதிபதி–பிரதமர் தலைமையிலான இவ்வரசாங்கத்திற்கு இருக்கிறது.
என்னிடம் அமைச்சு பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எப்பொழுதும் நீதிக்கு மதிப்பளிக்கிறேன்.
ஜனாதிபதி – பிரதமர் ஒன்றினைந்து ஏற்படுத்திய மாற்றத்தினை பாதுகாப்பதற்கு நான் அர்பணிப்புடன் செயற்படுகிறேன்.

 

கூட்டுறவு தேர்தல் என்பது இந்நாட்டு மக்களின் தேர்தல் இல்லை. இதன் மூலமாக மக்களின் நிலைப்பாட்டினை எம்மால் கணிக்க இயலாது. மேலும் இத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தரப்பினரே பங்குப்பற்றினார். எனவே இம்முடிவு தொடர்பாக நாம் கலவரமடைய தேவையில்லை. இன்று எங்கள் நாடானது முன்னேற்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இன்று ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் எங்களுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமரும் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளிற்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றார்கள். இத்தலைவர்களுக்கு முழுமையான சர்வதேச ஆதரவுள்ளது. கட்சிகள் பிளவுன்டு, வேறுபட்டு, அடிதடியில் ஈடுபட்டு, கொலைச் செய்து, தீயூட்டி அரசியல் செய்த காலம் தற்சமயம் நிறைவடைந்துள்ளது.

 

இன்று இரு பிரதான கட்சிகள் ஒன்றினைந்து செயற்படுகின்றன. இதுவே நாம் உலகிற்கு எடுத்தியம்பியுள்ள சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்நாட்டிலுள்ள இரு பிரதான கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய சுய தேவையினை கருத்திற் கொள்ளாது நாட்டின் தேவையிற்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள். நாம் இன்று சட்டத்தை எம் கைகளிற்கு எடுக்கவில்லை. கடந்த காலத்தில் நீதியை தம் கைகளிற்கு எடுத்து அக்காலத்திலிருந்தவர்களின் தேவைகளிற்கேற்ப சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இன்று அவ்வாறானதொரு நிலையில்லை. ஏன்றும் தெரிவித்தார்