நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண்கள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
தொம்பே, அரலகங்வில, களுத்துறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களிலேயே இவ்வாறு நால்வர் உயிரிழந்துள்ளனர்.
தொம்பே, தித்தபத்தர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
29 மற்றும் 49 வயதுடைய லுணுகம மற்றும் பாதுக்கை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் அரலகங்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மோட்டார் சைக்கிளை கட்டுப்பாடுத்த முடியாமல் அருகில் இருந்த மின் கம்பத்தடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, களுத்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று மோட்டார் வாகனத்தின் பின்னால் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


