மன்னார் மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது (காணொளி)

497 0

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, இன்று வடக்கு மாகாணமெங்கும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில், மன்னார் மாவட்டத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் பஸார் பகுதியில் உள்ள அணைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

தமிழ், முஸ்ஸீம் வர்த்தகர்கள் இணைந்து ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

மன்னாரில் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு, எவ்வித சேவைகளும் இடம்பெறவில்லை.

பாடசாலைகளுக்கு குறிப்பிட்ட அளவு மாணவர்கள் சென்றுள்ள போதும், போக்குவரத்து சேவைகள் இல்லாமையினால் அதிகளவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை.

மேலும் மன்னாரில் உள்ள அரச தனியார் அலுவலங்களுக்கும் பணியாளர்கள் சமூகமளிக்கவில்லை.

இதனால் மன்னார் மாவட்டம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு, மன்னாரில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையம் மற்றும் உணவங்கள் மூடப்பட்டுள்ளபோதும் ஒரு சில உணவகங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.