வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது (காணொளி)

567 0

வடக்கு மாகாணமெங்கும் இன்று கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், வவுனியாவிலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் வவுனியா நகர் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் தமிழ் மற்றும் முஸ்லீம் வர்த்தகர்கள் தமது அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.

இதேவேளை உள்ளுர் பேரூந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைத்துள்ளன.

வெளியூருக்கான போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றன.

முச்சக்கரவண்டிகள் தமது சேவையில் இருந்து புறக்கணித்திருந்ததுடன் புகையிரத கடவை காப்பாளர்களளும் தமது சேவையை புறக்கணித்திருந்தனர்.

பாடசாலைகளுக்கு குறைந்தளவான மாணவர்களே பிரசன்னமாகியிருந்ததுடன், அரச திணைக்களங்கள் வழமைபோன்று இயங்குவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.