வடக்கு மாகாணம் ஹர்த்தாலால் முடங்கியது(காணொளி)

290 0

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க கூடாது என தெரிவித்து, வடக்கு மாகாணத்தில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வடக்கில் ஹர்த்தால் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வடக்கு மாகாணம் ஹர்த்தாலால் முடங்கியது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், வடக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு, அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்புக்கள் தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளன.

இலங்கை அரசின் அசமந்தப் போக்கால் அல்லலுறும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதராவாக, தாம் ஹர்த்தாலில் ஈடுபட்டுள்ளதாக,அனைத்து அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் ஹர்த்தால் போராட்டத்தினால், யாழ்ப்பாணம் இன்று முடங்கியது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துக்கள் இன்று சேவையில் ஈடுபடவில்லை.
இதேவேளை பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவின்மை மிகக்குறைந்தளவு காணப்படுவதனால், கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளன.
இந்நிலையில் யாழ்ப்பாணம் வெறிச்சோடி காணப்படுகிறது.