கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கானஅனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது

274 0

201608250915539530_engineering-college-student-murder-life-sentence-for-4_secvpfபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கானஅனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இன்று இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்துக்கு பலகோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக கூறி தாக்கல்செய்யப்பட்டுள்ள, அவென்காட் தொடர்பான விசாரணைகளின் போது கடந்த வாரத்தில்கோத்தபாய உட்பட எட்டு பேருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

அதன்போது அவருடைய கடவுச்சீட்டு நீதிமன்றத்தின்பாதுகாப்பில் வைக்கப்பட்டதுடன் அவர்கள் வெளிநாடு செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில் சீனாவில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளுமாறு கோத்தபாயவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இது சம்பந்தமாக அவர்கள் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி முன்வைத்த போது எதிர்வரும் 3ம் திகதி(இன்று) அறிவிக்கப்படும் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.