அகலவத்த, பிம்புர பகுதியில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து பிஸ்டல் ஒன்றும், போரா 12 வகை துப்பாக்கிகள் இரண்டும் டபள் பொரள் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
22 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


