கிழக்கு மாகாண ஆளுநருக்கு மலர் மாலை, பொன்னாடை வேண்டாம்-ஆளுநர் அலுவலகம்

297 0

கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் மாகாணத்துக்குள் நடைபெறும் அரச நிகழ்வுகளில் ஆளுநரை வரவேற்பதற்கு மலர் மாலைகள், பொன்னாடை போர்த்துதல் மற்றும் நினைவுச் சின்னம் வழங்குதல் என்பவற்றை தவிர்ந்து கொள்ளுமாறு மாகாண அரச நிறுவனங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்தல் வழங்கியுள்ளது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் சகல செயலாளர்கள், பிரதிச் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருக்கு ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தனவின் கையொப்பத்துடன் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.