நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மாகந்துரே மதூஷிடம் உதவி பெற்றவர்கள் எனவும் அரசியல் மேடையில் ஏறுவதற்கு தான் வெட்கப்படுவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்தார்.
பண ரீதியிலும், வேறு வகையிலும் உதவி பெற்றவர்கள், அவருடன் அரசியல் மேடையில் ஏறியவர்கள், விமான நிலையம் வரை சென்றவர்கள், கடவுச் சீட்டில் முகம் மாற்றியவர்கள், டுபாய்க்குச் சென்று சந்தித்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் உள்ளனர்.
மதூஷுடன் தொடர்புடையவர்கள் யார் என்ற விபரங்கள் வெகு விரைவில் தெரியவரும் எனவும் அவர் மேலும் கூறினார்.
நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


