பொரலஸ்கமுவ பிரதேசத்தில் ஒருவர் கொலை

297 0

பொரலஸ்கமுவ, கஹடகஹவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

உயிரிழந்த நபருக்கும் மனைவிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மனைவியின் முன்னாள் கணவனின் மகன் இந்தக் கொலையை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

வெரஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொலைச் சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.