புத்தர் சிலை உடைப்பு ஒரு சம்பவம் அல்ல- ராவணா பலய

335 0

அடிப்படை வாதிகளினால் நாட்டில் நடைபெற்ற புத்தர் சிலை உடைப்பு நடவடிக்கைகள், இளைஞர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சம்பவம் என அரசாங்கம் காட்ட முயற்சிக்கின்றது என ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல. நீண்ட காலமாக பௌத்தர்களுக்கும், பௌத்த மதத்துக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் சதி முயற்சியின் ஒரு பிரதிபளிப்பே ஆகும் எனவும் தேரர் கூறினார்.

பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனை குறிப்பிட்டார்.