கோத்தபாய ஐ.தே.க.வுக்கு சவாலல்ல – காவிந்த

241 0

கோத்தபாய ராஜபக்ஷ் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் அது ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்தல் அறிவிக்கப்பட்டால் உரிய நேரத்தில் அறிவிப்போம். அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷ் ஒரு சிறந்த அதிகாரி என்றே அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என்பது தொடர்பில் மக்களுக்கு இன்னும் தெரியாது. அதனால் அதனை உணந்துகொள்ள மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது. என்றாலும் ஐக்கிய தேசிய கட்சி சிறந்த அரசியல் அனுபவமிக்க ஒருவரையே பேட்பாளராக நியமிப்போம் என்றார்.