கல்வியை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் சூட்சுமமாக மேற்கொண்டு வருகின்றது-பந்துல

244 0

கல்வியை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் மிகவும் சூட்சுமமாக மேற்கொண்டு வருகின்றது. அதற்கான அமைச்சரவை பத்திரமும்  ஜனாதிபதியின் கண்களை மறைத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் குறித்த அமைச்சரவை பத்திரத்தை திருப்பியனுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கல்வியை தனியார் மயமாக்கும் திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி மிகவும் இரகசியமாகவும் சூட்சுமமாகவும் மேற்கொண்டுவருகின்றது. அதன் ஆரம்ப நடவடிக்கையாக அரசாங்கத்துக்கு இணைக்கப்படாத 80 தனியார் பாடசாலைகளுக்கு 5 கிளைப்பாடசாலைகள் என்றவகையில் நாடுபூராகவும் 400 தனியார் பாடசாலைகளை அமைக்க அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

அத்துடன் அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத தனியார் பாடசாலைகளை சட்டத்துகுட்படுத்திக்கொள்ள 13 பாடசாலைகளுக்கு சம்பளம் வழங்குவதற்கு என்று தெரிவித்தே இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.