9 வயது பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!

24 0

திருகோணமலை – தெவனிபியவர பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரோயகம் செய்த தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹதிவுல்வெவ – தெவனிபியவர பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த மாணவியின் தந்தை தாயை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் , மாணவி தாயுடன் வாழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , மாணவியின் தாயுடன் பழகிவந்த நபரொருவர் , அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் நிலையில் , தாய் இல்லாத நேரத்தில் மாணவியை இவ்வாறு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு

Posted by - January 22, 2019 0
விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல…

பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Posted by - February 16, 2019 0
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு தூக்கில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்

Posted by - January 14, 2018 0
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில்…

குடமுறுட்டிக் குளத்தின் கீழ் வறட்சியால் அழிவடைந்து கொண்டிருக்கும் 321 ஏக்கர்

Posted by - July 9, 2017 0
கிளிநொச்சி பூநகரி குடமுறுட்டிக் குளத்தின் கீழ் வறட்சியால் அழிவடைந்து கொண்டிருக்கும் 321 ஏக்கர் நெற்பயிரைக் காப்பதற்கு அக்கராயன் குளத்தில் இருந்து நீரினைப் பெற்றுக் கொள்வது என ஆலோசிக்கப்பட்ட…

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கான பேருந்­து­ ஒழுங்குகள்!

Posted by - May 17, 2018 0
முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் பேருந்­து­கள் செல்­ல­வுள்­ளன. பேருந்­து­கள் புறப்­ப­டும் இடம், செல்­லும் பாதை தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­­னால் நேற்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.