ஒரு தொகை ஹெரோயின் போதைபொருட்களுடன் இருவர் கைது!

46 0

பத்து இலட்சம் ரூபா பெறுமதியான 100 கிரேம் ஹெரோயினை வேன் ஒன்றில் கொண்டு சென்ற இருவர் கட்டுநாயக்கவில் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நீர்கொழும்பு தாகொன்னவை சேர்ந்த 30 வயதானவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க போதை பொருட்கள் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று மாலை 4.30 மணியளவில் 18 ஆவது ஒழுங்கை பகுதியில் குறித்த அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த நபரை கைது செய்தபோது காற்சட்டை பையில் மறைத்துவைத்திருந்த  சுமார் 10 இலட்சம் பெறுமதியான 100 கிராம் ஹெரோயினை போதைபொருட்களை  கைப்பற்றியுள்ளனர். 

குறித்த ஹொரோயின் தற்போது டுபாயில் இருந்து கைதுசெய்யப்பட்ட மதுஷ்கவுடன்  தொடர்புடையவர் மூலம் குறித்த நபர் பெற்றுள்ளதாக பொலிஸ் மேலதிக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

குறித்த சம்பவத்தில் கார் சாரதியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.