ரணில் கல்வி அமைச்சராக இருந்தபோதே கல்வித்துறை முன்னேற்றங்கண்டது – சாகல

260 0

ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அவருடைய தூர நோக்க செயற்பாட்டின் காரணமாகவே நாட்டில் கல்வித்துறை சிறப்பாக வளர்ச்சியடைந்தது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

காலி – சமனல விளையாட்டரங்கில் நேற்று  நடைபெற்ற போனவிஸ்டா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பிரதமரின் அண்மைய ஐரோப்பிய விஜயத்தின் போது தகவல் தொழில்நுட்ப பேட்டையொன்றை இந்நாட்டின் தென் பகுதியில் நிர்மாணிப்பதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விருப்பம் வெளியிட்டிருந்தார்கள். 

தொழில்நுட்ப மாற்றங்களிற்கு ஏற்ப தம்முடைய வாழ்வினை மாற்றியமைக்கும் திறன் தென்மாகாண பிள்ளைகளிடம் உள்ளது. 

வெலிகம முதலீட்டு வலயம் மூலமாக மாத்தறை மற்றும் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். கொழும்புக்கு வேலைத்தேடி செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. 

Leave a comment