உயர்தர மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்கும் திட்டம் , அமைச்சரவை அனுமதி

277 0

நாடளாவிய ரீதியில் உள்ள உயர் தர மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்மின் ஆலோசனையின் கீழ் முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

இதன் பிரகாரம் இந்த வேலைத்திட்டம் உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து 1AB பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் அமுல்ப்படுத்துவதற்கு இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் கிடைக்கபெற்றது.

நவீன கல்வியில் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப பாடசாலை கல்வியை உருவாக்கும் அரச வேலைத்திட்டத்தின் கீழ் டெப் கணிணி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர இணக்கம் தெரிவித்துள்ளார். 

1 AB பாடசாலைகளில் உள்ள உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து கண்காணிப்பு செயற்திட்டம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படுவதுடன் அதன்பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு மூன்று மாதங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உயர்தர மாணவர்களுக்கும் டெப் கணிணி வழங்கல் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். 

டெப் கணிணி வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்த போகும் முறைமையை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்வைக்கவுள்ளார்.

Leave a comment