உரிய நேரத்தில் மன்றுக்கு வருகை தர வேண்டும் – கோத்தாவை எச்சரித்த நீதிமன்றம்

330 0

உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காத காரணத்தினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. 

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7  பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முதல் பிரதிவாதியான கோத்தா மறில் ஆஜராகவில்லை. அத்துடன் 6 ஆம் பிரதிவாதியும் மன்றில் இருக்கவில்லை.

இந் நிலையில் பெயர் வாசிக்கப்பட்டபோது 2,3,4,5,7 ஆம் பிரதிவாதிகள் மட்டுமே பிரதிவாதிக் கூண்டில் ஏறினர்.

இதன்போது 6 ஆம் பிரதிவாதிக்கு சத்திர சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரது மருத்துவ சான்றிதழ் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் கோத்தா மன்றில் ஆஜராகவில்லை. இந் நிலையில் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே கோத்தா மன்றுக்கு வருகை தந்தார். வரும் வழியில் வாகன நெரிசல் காரணமாக தன்னால் உரிய நேரத்துக்கு மன்றுக்கு வருகை தர முடியாமல் போனதாக கோத்தா தரப்பில் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தன்போது, பரிதவாதியான கோத்தாவை உரிய நேரத்தில் மன்றில் ஆஜராக எச்சரிக்குமாறு அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்  நீதிபதிகளை கோரினார். இதனை ஏற்றுக்கொன்ட நீதிமன்றின் தலமை நீதிபதி சம்பத் அபேகோன், அனைத்து பிரதிவாதிகளும் வழக்கு விசாரணைகளின் போது உரிய நேரத்தில் மன்றில் ஆஜராக வேண்டும் என எச்சரித்தார்.

Leave a comment