மஸ்கெலியா நகருக்கு புதிய கழிவகற்றும் இயந்திரம்

298 0

மஸ்கெலியா பிரதேச சபையின் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் மஸ்கெலியா. நல்லதண்ணி. லக்கம். சாமிமலை. ஆகியவற்றை அண்டிய பகுதிகளின் சுற்று சூழலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவது நமது தலையாய கடமையாகும் என மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோ. செம்பகவள்ளி தெரிவித்தார். 

அவர் இன்று 12 ஆம் திகதி மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தான மண்டபத்தில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் எமக்கு தற்போது மத்திய மாகாண ஆளுநர் ஊடாக கழிவுப் பொருட்களை கொண்டு செல்லும் பார ஊர்தி ஒன்று கிடைத்துள்ளது. மேலும் பல வாகனங்கள் வர உள்ளன. நாம் நகரை மெருகுடன் வைத்துக்கொள்ள வேண்டும்

மேலும்கழிவு பொருட்களைத் தரம் பிரித்துத் தருமாறும் கழிவுப் பொருட்களை வாகனத்திற்கு ஒப்படைக்கும் போது கண்ணாடி பொருட்கள், குப்பைகள், பொலிதீன் மற்றும் தகர பொருட்கள், என  4 விதமாகத் தரம் பிரித்துத் தருமாறும் கேட்டுக்கொண்டதுடன்,

நகரில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தி; அதனை வாகனத்தில் ஒப்படைத்து நகரைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும் கழிவு பொருட்களை வடிகால்களில் போட வேண்டாம் எனவும் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோ.செம்பகவள்ளி  கேட்டுக்கொண்டார்

Leave a comment