ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் மற்றொரு தீர்மானம்- பிரிட்டன்

4 0

ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்றை இலங்கை விவகாரத்தை கையாளும் முக்கிய நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன என பிரிட்டன் தெரிவித்துள்ளது

திங்கட்கிழமை இடம்பெற்ற மனிதஉரிமை பேரவையின் கூட்டமொன்றில் ஜெனீவாவிற்காக பிரிட்டனின் தூதுக்குழு இதனை தெரிவித்துள்ளது

இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான தீர்மானமொன்றை கனடா ஜேர்மனி மசெடோனியா மொன்டினீக்ரோ பிரிட்டன் ஆகிய நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன என  பிரிட்டன் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகளிற்கான பிரிட்டனின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி யூலியன் பிரத்வைட்  தெரிவித்துள்ளார்

இலங்கை தொடர்பான முக்கிய குழு இலங்கையுடன் இணைந்து செயற்படும 2015 இல் ஆரம்பமான ஒத்துழைப்பை பேணமுயலும் எனவும் தெரிவித்துள்ள பிரிட்டன் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை  நடைமுறைப்படுத்த முயலுவோம் எனவும் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் சமர்ப்பிக்கவுள்ள தீர்மானம் 2015 இல் மனித உரிமை ஆணைக்குழு ஏற்படுத்திய செயல்முறையை தொடர்ந்தும் மேலும் நீடிக்க முயலும் எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாங்கள் உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரிட்டன் புதிய தீர்மானத்திற்கு மனித உரிமை பேரவையின் முழுமையான ஆதரவை பெறமுயலப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளதை தொடர்ந்து இலங்கை விவகாரத்தை கையாளும் பொறுப்பை பிரிட்டன் ஏற்றுக்கொண்டுள்ளது.

Related Post

உலகில் சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட கதியே மைத்திரி,றணிலுக்கும் – மஹிந்த

Posted by - August 2, 2016 0
சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட கதியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிவிப்பு!

Posted by - January 3, 2018 0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இன்று (03) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென, ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று முதல் அமுல்

Posted by - February 3, 2017 0
அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று(3) முதல் அமுல்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் உடனடியாக புலனாய்வுச் செயற்பாடுகளை அதிகரிக்கவேண்டும்!

Posted by - October 28, 2016 0
வடக்கில் உடனடியாக புலனாய்வுச் செயற்பாடுகளை அதிகரிக்கவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடல் உரோஞ்சு பட்டைகளுடன் சீன நாட்டு பொதுமகன் கைது

Posted by - February 23, 2017 0
சிறுநீரக நோய்க்கு மருந்தாக பயன்படு;தப்படும் கடல் உரோஞ்சு பட்டைகளுடன் சீன நாட்டு பொதுமகன் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 16 கடல் உரோஞ்சு பட்டைகளை சீனாவுக்கு…

Leave a comment

Your email address will not be published.