தயாராகும் தூக்கு மேடை

32 0

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியாக அறிவித்துள்ள நிலையில், வெலிக்கடை சிறையின் தூக்கு மேடை தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி தூக்கிலிட பயன்படுத்தும் கயிற்றின் தரத்தை உறுதிசெய்துகொள்ள அந்த கயிறானது இலங்கை நியமனங்கள் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தூக்குக் கயிறு 2015 இல் பாகிஸ்தானிலிருந்து தருவிக்க்பபட்டது. அந்த கயிறு மரண தண்டனை வழங்கப்படுத்த முடியுமான தரத்தில் உள்ளத என்பதை ஆராயவே இது இவ்வாறு அங்கு அனுப்பப்பட்டது.

அந்த கயிற்றின் தரம் குறித்து சிக்கல் ஊற்பட்டால் உடனடியாக புதிய தூக்கு கயிற்றை கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.