வெளிநாட்டு தயாரிப்பிலான 300 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

1 0

பேருவளை-கங்கானம்கொட பிரதேசத்தில், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பிலான 300 சிகரெட்டுகளுடன், அப்பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பொலிஸாரால், இவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தன்னிடமுள்ள சிகரெட்டுகளை அப்பகுதியில் விற்பனைச் செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் விற்பனைச் செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் விலையை விட, குறைந்த விலையில் சந்தேகநபர் விற்பனைச் செய்து வந்துள்ளமை  பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த, பேருவளை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Post

சீனா இராணுவம் இலங்கைக்குவராது- ரணில்

Posted by - June 29, 2018 0
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் சீனாவின் இராணுவம் ஆக்கிரமிக்கும் என பலர் கூறுகின்றனர். என்றாலும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வணிக நோக்குடனே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதனால்…

எரிபொருள் விலை உயர்வு !

Posted by - April 19, 2018 0
எரிபொருள் விலையை உயர்த்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

நாளை பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

Posted by - July 27, 2017 0
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர் ஆகியோருடன்…

பரீட்சைக்கு தோற்றச்சென்ற இரு மாணவர்கள் கைது !

Posted by - December 15, 2017 0
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காகச் சென்ற இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கான விழிப்புணர்வு இன்று முதல் ஆரம்பம்

Posted by - January 18, 2017 0
இலங்கை அரசியலில், பெண் பிரதிநிதிகளின் விகிதாசாரத்தை அதிகரிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தினை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் முன்னெடுக்கவுள்ளது.

Leave a comment

Your email address will not be published.