மருந்துப் பொருள்களுக்கான தட்டுப்பாட்டுக்கு மார்ச் மாத இறுதிக்குள் தீர்வு

59 0

நாட்டில் நிலவும் மருந்துப் பொருள்களுக்கான தட்டுப்பாட்டுக்கு, எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் முழுமையான  தீர்வுக் காணப்படுமென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புற்று நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை, விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், எந்தவொரு மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவ இடமளிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 73 மருந்து வகைகளின் விலைகளை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், மேலும் 27 மருந்துவகைகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.