சுற்றுலா விடுதியில் ஏற்பட்ட நச்சுப் புகையில் ஒருவர் பலி

247 0

சுற்றுலாவிடுதியொன்றில் ஏற்பட்ட திடீர் நச்சுப் புகையினால் ஒருவர் பலியானதுடன் இரு பெண்கள் ஆபத்தான நிலையில் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் அப்புத்தளைப் பகுதியைச் சேர்ந்த இதல்கஸ்ஹின்ன சுற்றுலா விடுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. விடுதி உரிமையாளரான லோகநாதன் பாலசந்திரன் என்ற 60 வயது நிரம்பிய நபரே குறித்த  நச்சுப் புகையினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த விடுதியில் குளிர் கடுமையானதால்  அறைக்குள் பொருத்தப்பட்டிருந்த அடுப்பைப் பற்ற வைத்து வெப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு நித்திரைக்குச் சென்றுள்ளனர். அவ வேளையில் திடீரென்று அடுப்பிலிருந்து கடும் நச்சுப் புகை ஏற்பட்டு அறை முழுவதும் புகை மண்டலமாகியது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் தங்கமலை அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

அங்கு மூவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில். ஏனைய இருவரும் ஆபத்தான நிலையிலிருந்ததினால் அவர்கள் இருவரும் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும்  குறித்த இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகின்றன. இவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

நச்சுப்புகையினால் இறந்தவரின் சடலம் தங்கமலை அரசினர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீடுதியிவ் ஏற்பட்ட நச்சுப்புகை குறித்து தீவிர பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

 இந்நிலையில் இதுவரை குறித்த  நச்சுப் புகை குறித்து அறியப்படவில்லையெனவும், அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர தயாரட்ன தலைமையிலான குழுவினர் மேற்படி சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment