
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கின்னியா பிரதேசத்தில், சர்தாபுர வீதியில் ஒற்றைக்கண் துப்பாக்கியுடன் இருவர் இன்று கைது செய்யப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
விஷேட அதிரடைப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விஷேட நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இருவரும் கைது செய்யப்பட்டதாப பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மட்கோ மற்றும் அனுராதபுர சந்திப் பிரதேசங்ளைச் சேர்ந்தவர்களே துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் காரையும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

