நடிகர் ரயனின் கார் கேரளா கஞ்சாவுடன் மீட்பு!

301 0

பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோவன் பயன்படுத்திய கார் நேற்று மாலை வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த ஹோட்டல் உரிமையாளர் அமில பிரசங்க ஹெட்டிஹேவா எனப்படும் மதுஷுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட சுரன்பி சுத்தா என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரபல நடிகர் ரயன் வேன் ரோவன் வௌிநாடு செல்வதற்கு முன்னர், சில தினங்கள் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளதுடன், இருவருடன் சேர்ந்து வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், வெலிகம பொலிஸாரால் சுரன்பி சுத்தாவின் மூத்த சகோதரரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது குறித்த கார் நடிகர் ரயன் வேன் ரோவன் வந்திருந்த கார் என்று தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

காரை சோதனை செய்த போது காரில் இருந்து சுமார் 5ஆயிரத்து 750 மில்லி கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விவாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment