ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுபவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் பங்கா ளிகளாகவே கருதப்படுவார்கள்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக எமது தரப்பிலே ஒரு சிலர் கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றார்கள். இவர்கள் கட்சிக்குள் இருந்துக் கொண்டு உளவு கடமைகளை செய்தவதை விடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களாகி விடுவது சிறந்த தீர்மானமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்ற தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா எந்த தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


