அகுங்கல்லை, ராஜபக்ஷ வித்தியாலய மதில் சுவர் எல்லையில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக செய்தியாளர் கூறினார்.
அந்தப் பகுதியில் திருத்தப் பணிக்காக நிலத்தை தோண்டிய போது கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைக்குண்டு பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அகுங்கல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


