வழிகாட்டல் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில்

227 0

அரசியல் அமைப்பு பேரவையின் ஊடாக பெயர்களை முன்மொழியும்போது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய வழிகாட்டல் அறிக்கை பாராளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

அரசியல் அமைப்புபேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இடம்பெறுகிறார்கள். சபையில் எந்தவித அழுத்தமும் மேற்கொள்ளப்படுவதில்லை. உறுப்பினர்களுக்கு சுதந்திரமான கருத்துவெளியிடும் வாய்ப்பு காணப்படுவதாகவும், அரசியல் அமைப்புப் பேரவை சுயாதீனமாகவும் பக்கச்சார்பின்றியும் செயற்படுவதகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இவ்வாறான சுயதீன நிறுவனம் ஒன்றை எல்லை மீறி விமர்சிப்பது பொருத்தமற்றதாகும். ஜனாதிபதி பரிந்துரைக்கு பெயர் பட்டியல் மாத்திரமே சபையின் பேரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பப்படுகிறது. 

பேரவை தான்தோன்றித்தனமாகவோ வெளிநபர்களையோ முன்மொழிவதில்லை. தொழிலின் சிரேஷ்ட நிலை மாத்திரம் இதற்காக கவனம் செலுத்தப்படுவதில்லை. நான்கு அல்லது மூன்று பேரின் பெயர்கள் முன்மொழியப்படும்போது ஒருவர் மாத்திரமே தெரிவுசெய்யப்படுவதாகவும் சபாநாயகர் கூறினார். 

மனிதவுரிமைகள் ஆணைக்குழு சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. தகவல் அறியும் சட்டத்திற்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜெனீவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கபடவிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த முன்னேற்றங்கள் வலுசேர்க்கும் சுயாதீன நிறுவனங்களை கடுமையாக விமர்ச்சிப்பதன் மூலம் நாட்டுக்கு நீண்டகால பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஜனாதிபதியின் கூற்றுக்கு எதிராக கருத்து வெளியிட முடியாதென பாராளுமன்ற உறுப்பினர்மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

அரசியல் அமைப்பு பேரவை பற்றிய விவாதத்தை வழங்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். யோசனைகளை சமர்ப்பிக்காது எவருக்கும் ஜனாதிபதியை விமர்ச்சிக்க முடியாதென விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கூறினார். 

பாராளுமன்றத்தில் நிலவிய அமைதியற்ற நிலையை கருத்தில் கொண்டு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்காக சபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 11.35 அளவில் சபை மீண்டும் கூடியது. 

பாராளுமன்ற சபைக்கு செல்லும் லிப்ட் எனப்படும் மின்தூக்கி செயலிழந்ததாகவும். இதனால், 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 25 நிமிடங்களுக்கு மேலாக இயந்திரத்திற்குள் சிக்கி இருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தக கூறினார். 

Leave a comment