காமினி செனரத் மீதான வழக்கு ஒத்திவைப்பு

381 0

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இதன்போது வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு அழைக்கப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment