மூதாட்டியின் வீடு புகுந்து தங்க நகைகள் கொள்ளை

332 0

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள விபுலாநந்த வீதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவரின் வீடு புகுந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை வாக்குமூலங்களைப் பெறுவதில் ஈடுபட்டனர்.

சீனித்தம்பி – கனகபூசணி எனும் சுமார் 70 வயதுடைய இந்த மூதாட்டி தனியாக வசித்து வந்த வீட்டிற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் புகுந்து சுமார் 12 பவுண் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ள நிலையில்  குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தனது மகன் மத்திய கிழக்கு நாடொன்றில்  தொழில் புரிவதாகவும் தான் பேரப்பிள்ளைகளுடன் காலங் கழிப்பதாகவும் மூதாட்டி தெரிவித்துள்ளார்.

Leave a comment