மீரிஹான கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது

44 0

மீரிஹான கொலை சம்பவத்துடன்  தொடர்புடைய சந்தேக நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக மீரிஹான பொலிசார் தெரிவித்தனர். 

கடந்த  03 ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் நுகேகொடை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில்  கூரிய ஆயுதத்தால்  பெண்ணெருவர் வெட்டி கொலை செய்தமை மற்றும்  பெண்ணெருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியமை தொடர்பான  சம்பவம் ஒன்று  இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்வம்  தொடர்பாக  மீரிஹான பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்க அமையவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 25 வயதுடைய  ஹோமாகமை  பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரை இன்றைய தினம் கங்கொடவில நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published.