கிண்ணியா பிரதேசத்தில் மகாவெலி ஆற்றில் குதித்து காணாமல் போயிருந்த இரண்டாவது நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் கூறினார்.
சட்டவிரோத மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கடற்படையினர் சுற்றிவளைத்த போது மூவர் ஆற்றில் குதித்துள்ளனர்.
இதில் ஒருவர் உயிர் தப்பியிருந்ததுடன் ஏனைய இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில் காணாமல் போயிருந்த இருவரில் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதுடன், இரண்டாவது நபரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


