ஹோட்டல் அறையில் சந்தேகமான முறையில் தீயில் எரிந்த சடலம்

366 0

நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்போம்பிரிய பிரதேசத்தில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். 

அந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் தங்கியிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், நேற்று மாலை 05.30 மணியளவில் இன்னொரு நபருடன் வந்து வடகைக்கு அறையை பெற்றுள்ளார். 

அந்த நபர் நேற்று இரவு 07 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment