கோத்தாவினால் 40 வீத வாக்குகளைக் கூட பெறமுடியாது – ரஞ்சன்

5100 32

முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அவருடைய வாழ்நாளில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நெடுஞ்சாலை வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அவரால் தேர்தலில் 40 வீத வாக்குகளைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அவரால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களே அதற்கான காரணமாகும் எனவும் தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயார் எனத் தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Leave a comment