மத்தல விமான நிலையத்தை இந்தியா நிர்வகிக்க முடிவு ?

235 0

மத்தலயிலுள்ள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்துள்ளது. தற்போது, இந்தியாவுக்கு மத்தலயில் உள்ள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மிகுதி 30 சதவீத பங்குகளை இலங்கை அரசாங்கம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் எனவும் இந்திய ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.

இதேவேளை, மத்தல விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதை இந்தியா புனரமைக்கும் என்று இலங்கை விமான போக்குவரத்து உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாகவும் விமான நிலையத்தை 40 ஆண்டுகள் இந்தியா நிர்வகிக்குமெனவும் இதுதொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளின் விமான நிலைய ஆணையங்களிடையே கையெழுத்தாகும் என்றும் இந்திய ஊடகமொன்று மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment